ஐடி ரெய்டு வருவோம் என வருமானவரித்துறை அதிகாரி போல் பேசிய டிரைவர் போலீசாரால் குறி வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரி என கூறி தொழிலதிபர்களிடம் மோசடி செய்து வந்த விக்னேஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் ஆக்டிங் ஓட்டுநராக பணி புரிந்த விக்னேஷ்குமார். இவர் வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி பல தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு ஐடி ரெய்டு வரவுள்ளதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் ஐடி ரெய்டு வராது எனவும் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதே போல் சமீபத்தில் ஒரு தொழிலதிபரை இவர் மிரட்டிய நிலையில் அந்த தொழில் அதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விக்னேஷ்குமாரை குறி வைத்து பிடித்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.