பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில் போராட்டம் செய்த செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை நிரந்தரமாக்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் போராட்டம் செய்த தொகுப்பூதிய செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். அப்போது திடீரென மயங்கி ஒரு செவிலியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட செவிலியர்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.