Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

போலீஸுக்கு கொட்டி கொடுக்கும் ஊர் சுற்றிகள்!

போலீஸுக்கு கொட்டி கொடுக்கும் ஊர் சுற்றிகள்!
, சனி, 27 ஜூன் 2020 (11:31 IST)
தடையை மீறி வாகனங்களில் சுற்றிய 7,44,688 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு என தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.       
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.     
 
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,44,688 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 5,55,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 6,82,385 வழக்குகள் பதிவு, ரூ.15.65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாங்காங் பாதுகாப்பு சட்டம்: சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா