Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டிக்டாக்கா பண்றீங்க? – மாணவர்களை நடுரோட்டில் நிற்க வைத்த போலீஸ்!

டிக்டாக்கா பண்றீங்க? – மாணவர்களை நடுரோட்டில் நிற்க வைத்த போலீஸ்!
, புதன், 8 ஜனவரி 2020 (12:50 IST)
தூத்துக்குடியில் காவல் வாகனத்தின் மீது அத்துமீறி ஏறி டிக்டாக் செய்த மாணவர்களுக்கு நூதனமான தண்டனையை போலீஸார் வழங்கியுள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் இளைஞர்கள் பலர் சமூல வலைதளங்களிலேயே பெரும்பாலும் நேரத்தை செலவழித்து வருகின்றனர். தங்களது நடிப்பு மற்றும் நடன திறமையியை காட்ட டிக்டாக் செய்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த டிக்டாக் மோகம் இளைஞர்களை மட்டுமல்லாது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரையும் பாதித்துள்ளது.

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது அனுமதியில்லாமல் ஏறிய கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் வசனங்கள் பேசி டிக்டாக் செய்துள்ளனர். அவர்களை பிடித்து போலீஸார் விசாரித்த போது டிக்டாக்கில் அதிகம் லைக்ஸ் பெறுவதற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளனர். அவர்களை தூத்துக்குடி மார்க்கெட் ரோட்டில் நிறுத்திய காவலர்கள் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் பணியை தண்டனையாக வழங்கியுள்ளனர். காவல் துறையினரின் பணி எவ்வளவு கடினமானது என்பதை உணர செய்யவே இந்த நூதன தண்டனை வழங்கப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் விமான விபத்து: பயணித்த 170 பேர் பரிதாப பலி