Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (09:29 IST)
உசிலம்பட்டி அருகே ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் - கடத்தல் தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலையத்திற்கு ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பன்னியான் விலக்கு பகுதியில் செக்காணூரணி காவல் நிலைய போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வாகன சோதனையின் போது சந்தேகப்படும்படி வந்த இனோவா காரை இடைமறித்து சோதனை நடத்தியதில் காரில் 44 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.இந்த கடத்தல் தொடர்பாக வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்தி என்ற பெண் உள்பட பழனியைச் சேர்ந்த காசிமாயன், குழித்தலையைச் சேர்ந்த சுரேஷ், திண்டுக்கலைச் சேர்ந்த சுகுமாறன் என்ற 4 பேரை கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 980 ரூபாய் ரொக்கம், 11 செல்போன்கள், கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தும் போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments