தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ள நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கும் ஆலோசனையும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளை இணைத்து, பொள்ளாச்சி மாவட்டம் என்ற புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து முதல்வரிடம் இருந்து விரைவில் நல்ல தகவல் வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புதியதாக உருவாகவுள்ள பொள்ளாச்சி மாவட்டத்தில், உடுமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை ஆகிய நகரங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.