Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரா கோட்ஸ் ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு!

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (19:03 IST)
நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் மதுரா கோட்ஸ் ஆலையின் மின் இணைப்பு தூண்டிக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ளது மதுரா கோட்ஸ் நூற்பாலை. இந்த ஆலை கடந்த 135 ஆண்டுகளாக அங்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கிருந்து உற்பத்தி ஆகும் நூல் மற்றும் துணிகள் உள்நாட்டு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர்.
 
இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலந்துவிடுவதால் ஆறு மாசடைவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாசு கட்டுப்பாடு வாரியம் அந்த ஆலைக்கு சில விதிமுறைகளை விதித்து அதை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.
 
இதனையடுத்து, ஆலை நிர்வாகம் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஆலையின் தேவைக்காக பயனபடுத்துவதாக கூறியது. ஆனால், சாயம் கழந்த கழிவு நீரை மறுசுழற்சி செய்வதில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு உடன்பாடு இல்லை. மேலும், ஆலையில் உள்ள கழிவுகளை அங்கிருக்கும் குளத்தில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதையும் அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். 
 
இதனால் அந்த ஆலைக்கு மின்சார வசதி துண்டிக்கப்பட்டது. அதனால் அந்த ஆலையை ஜெனரேட்டர் உதவியுடன் இயக்க முயன்றது  நிர்வாகம். இதற்கு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்போது ஆலையின் செயல்பாடு முற்றிழும் முடங்கியுள்ளது. அந்த ஆலையில் வேலை செய்யும் தொழிலார்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. இந்த பிரச்சனைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அந்த ஆலையின் தொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments