தமிழக அரசு கேட்டுக்கொண்டபடி சிலை கடத்தல் குறித்த ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்.
நீதிமன்றத்தால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலின் பதவி காலம் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேலிடம் உள்ள ஆவனங்களை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
ஆனாலும் பொன்.மாணிக்கவேல் ஆவணங்களை அளிக்காததால் அவர் மீது தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு அவகாசம் அளித்தது. காலக்கெடுவிற்குள் ஆவணங்கள் அளிக்கப்படாததால் பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும், பதவிகாலம் முடிந்த பிறகும் அரசாங்க ஆவணங்களை வைத்திருப்பது குற்றம் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார். இதனால் தமிழக அரசு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.