ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்த போதும் அவரது பேச்சை விமர்சித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
சமீபத்தில், திமுக அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா உற்ப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஊடங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும் அநாகரிமாக விமர்சித்தார். இதனால் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து இதற்கு வருத்தம் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்த போதும் அவரது பேச்சை விமர்சித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் கூறியதாவது, ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த நிலையில் அதனை பெரிதுபடுத்தகூடாது என்ற போதிலும் வார்த்தைகள் அனைத்தும் நச்சு பூசப்பட்ட அம்பு எய்ததை போன்றது.
ஸ்டாலின் பேச்சை கேட்கும் கிளிப்பிள்ளை போல திமுகவினர் பேசிவருவதால் பாரதியின் பேச்சு ஸ்டாலினின் கருத்தாக தான் இருக்க முடியும். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தகுதிக்கான அருகதையற்றவர் என்பதற்கு நிரூபணமாகியுள்ளது அவரது பேச்சுக்கள். பதவியை தக்கவைப்பதற்காகவே பாரதி மன்னிப்பு கேட்டுள்ளார் என சாடியுள்ளார்.