Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க அப்படி தான் பேசுவோம்..நீங்க வேணும்னா காத மூடிக்கோங்க.. என்ன சொல்ல வர்றார் பொன்னார்?

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (08:22 IST)
எச்.ராஜா வாய்தவறி பேசிவிட்டார் அதனை பெரிது படுத்தாதீங்க என பொன்.ராதா கிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது காவல் துறை மற்றும் நீதித்துறையை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கீழ்த்தமாக விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  
 
இதனையடுத்து உயர்நீதிமன்றம் ஹெச்.ராஜா மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. எனவே, எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை கைது செய்யப்படவில்லை.
வழக்கம்போல் தமிழக பாஜக நிர்வாகிகளும், பாஜகவிற்கு பினாமியாக செயல்பட்டு வரும் அதிமுக அமைச்சர்களும் தியாகி எச்.ராஜாவிற்கு முட்டுக் கொடுத்தே பேசினர். இதில் ஹைலைட் என்னவென்றால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எச்.ராஜா பேசியதை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியாது என்று கூறியது தான். ஏம்பா எஜமானருக்கு இவ்வளவா விஸ்வாசமாக இருப்பது என அதிமுகவினரை பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் எச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சு குறித்து பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், அவர் என்னமோ தெரியாமல் பேசிவிட்டார். இதனை மீடியாக்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இவர் கூறுவது எப்படி இருக்கிறது என்றால் நாங்கள் அப்படி தான் அவ்வப்போது மதவெறியை தூண்டும் விதமாக பேசுவோம். பின் செய்தது தவறு என முட்டுக்கொடுப்போம். நீங்கள் வேண்டுமானால் காதை மூடிக்கொள்ளுங்கள் என்பது போல் இருக்கிறது.
 
மருத்துவ மாணவி சோபியாவும் விமான நிலையத்தில், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என வாய் தவறி பேசிட்டாங்க என்று கூறியிருந்தால் நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பீர்களா மிஸ்டர் பொன்னார் அவர்களே? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments