காவிரி நதிநீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பில் திட்டம் என்பது பற்றி தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என்று கர்நாடக அரசும் கூறி வந்த நிலையில் தற்போது மத்திய அரசும் அதே கூறியுள்ளது.
நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால். மத்திய அரசு மீது சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எல்லோரும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பில் திட்டம் என்பது பற்றி தெளிவாக கூறியிருந்தால் பிரச்சனையில்லை. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.