Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Mahendran
திங்கள், 8 ஜனவரி 2024 (18:27 IST)
பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

பொங்கல் பரிசு தொகையுடன் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான டோக்கன் நேற்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் மகளிர் உரிமை தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதை போல பொங்கல் பரிசு தொகையையும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை செய்த நீதிபதிகள் பொங்கல் பரிசு தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.  மேலும்  பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்தை வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மட்டும் ரொக்கமாக வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

ஓணம் பண்டிகை: கேரளாவில் 12 நாட்களில் 818 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..!

உதயநிதி பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக இருக்கும்.! தமிழிசை விமர்சனம்..!!

10 நாட்களுக்குள் துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி..! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..!!

நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments