Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமாக முன்வந்து எடுத்த அமைச்சர் பொன்முடி வழக்கு.. வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:03 IST)
சமீபத்தில் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன  
 
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துக்கொண்டார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தானாக முன்வந்து விசாரிக்க எடுத்த வழக்கில்  தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதியை விசாரிக்க அனுபவிப்பதா என்பது குறித்து செப்டம்பர் 14ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தெரிவித்த கருத்துக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக உள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments