Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 19 May 2025
webdunia

கோவை மாணவி விவகாரம்: 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம்

Advertiesment
போக்சோ
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (22:15 IST)
கோவையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்காமல் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டதாக நாற்பத்தி எட்டு யூடியூப் சேனல்கள் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது
 
தற்கொலை செய்து கொண்ட மாணவி மைனர் பெண் என்பதால் அவரது புகைப்படத்தை பொதுவெளியில் காண்பிப்பது தவறு என்றும் குறிப்பாக பாலியல் விவகாரத்தில் 18 வயதுக்குக் குறைவான பெண்களின் புகைப்படத்தை காண்பிப்பது தவறானது என்று என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இதனை மீறி 48 யூடியூப் சேனல்கள் இதுகுறித்த செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த யூடியூப் சேனல்கள் மீது சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 19ல் அமைச்சரவை கூட்டம்: வெள்ள நிவாரண நிதி குறித்து ஆலோசனையா?