Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்போன்னு விஜயகாந்தை விட்டுச்சென்ற பிரேமலதா: டென்ஷனாகி கத்திய பன்னீர்செல்வம்

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (09:19 IST)
கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபின்னர் தேமுதிகவினர் கேப்டனை விட்டுட்டே வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒவ்வொரு தேர்தலின்போது திமுக, அதிமுக என இரண்டு கூட்டணியிலும் பேரம் பேசி எதில் அதிக தொகுதிகளும் மற்ற முக்கிய அம்சங்களும் கிடைக்கின்றதோ அதில் கூட்டணி வைக்கும் முக்கிய கொள்கையை கொண்டுள்ள தேமுதிக, இந்த முறையும் நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த கூட்டணி அறிவிப்பு சென்னையில் உள்ள ஹோட்டலில் கையெழுத்தானது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் பிரேமலதா, சுதீஷ் மற்றும் தேமுதிகவினர் விஜயகாந்தை அம்போன்னு விட்டுவிட்டு வெளியே சென்றனர். விஜயகாந்த் செய்வதறியாது பொம்மைபோல் சேரில் அமர்ந்திருந்தார். இதனைப்பார்த்த துணைமுதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதியை அழைத்து, வேலை முடிஞ்சதுன்னா எல்லாரும் அப்படியே போடுவீங்களா, கேப்டன பத்திரமா அழைச்சுட்டு போங்க என கூறினார்.
 
ஏற்கனவே தேமுதிக பெயரையும், கேப்டன் பெயரையும் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கெடுத்துவிட்டனர் என மக்கள் கூறி வரும் நிலையில் இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments