அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நேற்று எல்.கே.சுதீஷின் பேட்டி இதனை உறுதி செய்தது.
ஆனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது அதிமுக கூட்டணியில் தேமுதிக 6 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதிகளும் கேட்டதாம். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து ராஜ்யசபா தொகுதி இல்லை என்று கண்டிப்புடன் கூறப்பட்டுவிட்டதாம். மேலும் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் மட்டுமே அளிக்க முடியும் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது. அதேபோல் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத தேமுதிக கட்சிக்கு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
தேமுதிகவை பொருத்தவரை மக்களவை தொகுதியை விட ராஜ்யசபா தொகுதியை பெறவே அதிகம் விரும்புகிறதாம். ராஜ்யசபா தொகுதி கிடைத்தால் அதில் பிரேமலதாவை நிற்க வைத்து அவரை எம்பியாக்கி டெல்லி அனுப்ப வேண்டும் என்பதே தேமுதிகவின் திட்டமாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து வெற்றி பெறுவது என்பது சிரமமான காரியம் என்பதால் ராஜ்யசபா தேர்தல் மூலம் டெல்லி செல்ல வேண்டும் என்ற பிரேமலதாவின் கனவு பலிக்குமா? என்பது விஜயகாந்த் சென்னை திரும்பியவுடன் தான் தெரியவரும்