பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலத்தில் பிரச்சாரத்தில் இருந்தபோது அவரைக் கொரோனா சோதனை செய்து கொள்ள சொல்லி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து என்பதும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் பெற்றுள்ளது. இந்த தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் போட்டியிடவில்லை என்பதும் விஜயகாந்த் முதல் முறையாக போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அங்கே இப்போது பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது தம்பி சுதீஷுக்கும் அவர் மனைவி பூர்ணிமாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வரும் படி அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு பிரேமலதா மறுத்துவிட்டார்.