கூட்டணி குறித்து எந்த கட்சியுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அரசியல் கட்சிகள் இடையே நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கிட்டத்தட்ட பேச்சு வார்த்தையை முடித்து விட்ட நிலையில் அதிமுக கூட்டணி இன்னும் பேச்சு வார்த்தையை தொடங்கவே இல்லை என தெரிகிறது.
பாஜக கூட்டணி தங்களுடன் இணைய இருக்கும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேமுதிக கட்சி, அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் அதுமட்டுமின்றி திமுகவிடமும் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தேமுதிக கடைசி வரை குழப்பமான நிலையிலேயே இருந்து அதன் பிறகு ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்தது தான் இதற்கு முன் செய்த செயல் என்பது குறிப்பிடத்தக்கது