தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமாவுக்கும், அரசியலுக்கும் பேரிழப்பு என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இன்று தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரேமல்தா விஜயகாந்த் அளித்துள்ள பேட்டியில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கு அரசு மரியாதைக்கு நல்ல முறையில் ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றி கூறிக்கொள்கிறேன். விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சிறந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களில் 15 லட்சம் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் கூறினார் ''என்று தெரிவித்துள்ளார்.