தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் என்றும் தற்போதைக்கு மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் ஓட அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு காரணமாக நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் நாளை முதல் பேருந்துகளை இயக்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும் இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்லும் வகையில் அனுமதிக்க வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது