Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

Advertiesment
நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் இபாஸ்:

Siva

, புதன், 2 ஏப்ரல் 2025 (08:00 IST)
ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கு இ-பாஸ்  அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நேற்று முதல் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு இ.பாஸ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ்  இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் பல சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்..

இந்த நிலையில், இ-பாஸ் முறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததாகவும், இதன் காரணமாக தங்கள் வணிகம் பாதிக்கப்படுவதாகவும் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் மற்றும் பொது வேலை நிறுத்தம் இன்று நடைபெற்று வருகிறது. இ-பாஸ் நடை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வணிகர்கள் முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடை அடைப்பு போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!