Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில அதிர்வால் மக்கள் அச்சப்பட வேண்டாம்!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (17:16 IST)
நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேட்டியளித்துள்ளார். 

 
தமிழகத்தில் அவ்வப்போது திடீர் திடீரென நிலநடுக்கம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் அதே பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  வேலூர் நில அதிர்வு குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது, 
 
நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நில அதிர்வால் பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments