புதுவையில் நாளை முதல் மது கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுவையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது
இதனால் மது பிரியர்கள் சந்தோசம் அடைந்தாலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போதுதான் கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாகவும் இந்த நேரத்தில் மது கடைகளை திறந்தால் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மதுக்கடைகளை திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
மேலும் அண்டை மாநிலமான தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்காத நிலையில் புதுவையை மது கடைகளை திறந்தால் தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மது வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது