Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உடலுறவின் போது மாரடைப்பால் இளம்பெண் மரணம் –சிக்கிய காதலன் வாக்குமூலம்

உடலுறவின் போது மாரடைப்பால் இளம்பெண் மரணம் –சிக்கிய காதலன் வாக்குமூலம்
, வியாழன், 1 நவம்பர் 2018 (15:48 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலை அடையாளம் கண்ட போலிஸார் அந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ளனர்.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்  19  வயதான கஸ்தூரி  . இவர் தனது பக்கத்து ஊரண ஆலங்குடியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத 29-ந்தேதி அன்று காணாமல் போனார். இது குறித்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை ஏற்று அவரைத் தேடி வந்த போலிஸார் நேற்று அவரது உடலை புதுக்கோட்டையில் உள்ள மல்லிப்பட்டினம் ஆற்றில் இருந்து கண்டு பிடித்தனர். கஸ்தூரியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதையடுத்து அவர் பணிபுரிந்த மருந்தகத்தில் விசாரித்த போது அங்கு பணிபுரிபவர்கள் அவர் காணாமல் போன அன்று ஒரு ஆணுடன் வெளியே சென்றதாக கூறப்பட்டது. அந்த மர்ம ஆளைப் பற்றி விசாரித்த போலிஸார் அவரைக் கண்டுபிடித்துள்ளனர். நாகராஜன் என்ற பெயர் கொண்ட அந்த நபர் கஸ்தூரி கொலை சம்மந்தமாக போலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
webdunia

அதில் ‘நான் மினி ஆட்டோ ஓட்டி வந்தேன். நானும் கஸ்தூரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வோம். அதே மாதிரி அன்று வெளியே சென்ற இருவரும் தைலமரக்காட்டில் உடலுறவில் ஈடுபட்டோம். அப்போது திடீரென கஸ்தூரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நான் என்ன செய்வது என்று தெரியாமல் மாலை வரை அங்கேயே உட்கார்ந்திருந்தேன். பின்பு அவரது உடலை சாக்கில் கட்டி எனது வண்டியில் ஏற்றிகொண்டு மல்லிப்பட்டிணம் ஆற்றில் போட்டுவிட்டு திருச்சி சென்றுவிட்டேன். அதன் பின்  அங்கிருந்து சென்னை சென்றுவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் இதை ஏற்காத கஸ்தூரியின் உறவினர்கள் கஸ்தூரி கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். வழக்கு விசாரணை சரிவர நடைபெற வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த போலிஸார் மறியலைக் கைவிட்டும்படி கூறினர். இதையடுத்து பிரேதப் பரிசோதனை காட்சிகளை வீடியோ எடுத்து கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்மலாதேவி ஒரு கிழவி..அவல போய் நான் எப்படி.... கோர்டில் சீறிய கருப்பசாமி!