புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீர் பகுப்பாய்வு சோதனை செய்யப்பட்டதில், நீரில் மாட்டு சாணம் கலக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக குடிநீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து
சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது.
மேலும் இதுகுறித்த வழக்கில் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும், ஜூன் 4 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.