Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி! – முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (12:13 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கூட்டணிகளை முடிவு செய்து அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கு பேசிவந்த கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி கூட்டணியிலிருந்து விலகியுள்ளதுடன் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள கிருஷ்ணசாமி முதற்கட்டமாக 50 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட உள்ளார், அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது மறுநாள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கிக்கு வந்த பணத்திலேயே கள்ள நோட்டுகள்! வங்கிகளில் விசாரணை!

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகள்.., வீடியோவை இணையத்தில் வெளியிட்ட பெங்களூரு தம்பதி..!

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது! மீண்டும் சிங்கள கடற்படை அட்டூழியம்..!

நவம்பர் 12 முதல் கனமழை சூடு பிடிக்கும்.. சென்னை மக்கள் ஜாக்கிரதை: தமிழ்நாடு வெதர்மேன்..!

நீட் பயிற்சி மாணவியை 6 மாதமாக பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை..2 ஆசிரியர்கள் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments