காமராஜர் இங்கிலாந்து சென்ற போது ராணியின் அரண்மனையில் விருந்து கொடுக்கப்பட்டது.
இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.
70 ஆண்டு காலம் மகாராணியாக விளங்கிய இரண்டாம் எலிசபெத் இதுவரை மூன்று முறை இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார். முதன்முறையாக ராணி எலிசபெத் இந்தியா சுதந்திரமடைந்து 17 ஆண்டுகள் கழித்து 1961ல் இந்தியா வந்தார்.
இதனைத்தொடர்ந்து காமராஜர் இங்கிலாந்து சென்ற போது ராணியின் அரண்மனையில் விருந்து கொடுக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் மரபை மீறி ராணி எலிசபெத்தே காமராஜருக்கு உணவு பரிமாறி இருக்கிறார். வழக்கமாக எந்த தலைவருக்கும் ராணி நேரடியாக உணவு பரிமாறுவது கிடையாது. ஆனால் காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததால் மரபை மீறி விருந்து கொடுத்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.