Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து பைசாக்கு லாக்கி இல்ல... சொந்த கட்சியை வாரிவிட்ட ராதாரவி!!

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (12:34 IST)
பாஜக ஒரு தேங்காய் மூடி கட்சி, பணம் தரும் கட்சியல்ல என ராதாரவி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். 
 
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராதாரவி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டு பாஜகவில் இணைந்த்துக்கொண்டார். சமீபத்தில் கல்தா என்னும் திரைப்படத்தின் விழாவில் கலந்துக்கொண்ட அவர் பின்வருமாறு பேசினார்... 
 
எதற்கெல்லாமோ போராடி 3, 4 கோடி கையெழுத்து வாங்குகிறோம். குப்பை கொட்டக் கூடாது என்று கையெழுத்து வாங்க வேண்டியதுதானே. குப்பை கொட்டுவதைச் சொல்வதால் அதிமுக அரசை திட்டுகிறார் என்று நினைக்க வேண்டாம். 
 
அரசியல்வாதிகளை நாம் தான் வளர்க்கிறோம். யார் இந்த தெருவைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ஓட்டு என்று சொல்லிப் பாருங்கள். அனைத்துத் தெருக்களும் சுத்தமாக இருக்கும்.
 
ராதாரவி கட்சி மாறிவிட்டார், பணம் வாங்கிவிட்டார் என் அனைவரும் பேசுகிறார்கள். பாஜகவில் பணம் தருவார்கள் என்று சொல்லலாமா? பாஜக பணம் தரும் கட்சியா என்ன? அது ஒரு தேங்காய் மூடி கட்சி என தெரிவித்துள்ளார்.
 
தேங்காய் மூடி கட்சி என பாஜகவை அவர் விமர்சித்துள்ளது கட்சிக்குள் சர்சசையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தேங்காய் மூடி கட்சி என்பதின் பொருள் என்னவெனில், அந்த காலத்தில் கோவிலில் நிகழ்ச்சிகள் ஏதேனும் நடந்தால் நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு பணம் தராமால் தேங்காய், பழத்தை கொடுத்து அனுப்பிவிடுவார்களாம் இது போன்றது தான் பாஜக என சொல்லாமல் சொல்லியுள்ளார் ராதாரவி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments