ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி கலெக்டராக இருந்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் கிருமி நாசினி கொள்முதல் செய்வதில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மற்றும் அவரது சகோதரி உள்ளிட்ட ஒரு சிலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆண்டு கடந்த 2018 முதல் 2020 வரை தர்மபுரி கலெக்டராக மலர்விழி பதவி ஏற்று இருந்தார் என்பதும் தற்போது அவர் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.