சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை தொடரும் நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வானிலை நிலவரங்களை தொடர்ந்து கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.