கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாகவும் வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது.
குறிப்பாக சென்னை உட்பட நான்கு வட மாவட்டங்களில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்தது
இந்த நிலையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடலூர், ராமநாதபுரம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.