லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக இன்று அதாவது டிசம்பர் 20 அன்று தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 22 முதல் 26 வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதியில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மற்றும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.