Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோட்ட நம்பிதான் அதிமுக ஆட்சி; ஓட்ட நம்பி இல்ல: முன்னாள் அமைச்சர் விளாசல்

Advertiesment
ராஜகண்ணப்பன்
, வெள்ளி, 3 மே 2019 (09:54 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவின் ஆட்சி ரூபாய் நோட்டை நம்பிதான் உள்ளது மக்கள் ஓட்டை எதிர்பார்த்து இல்லை என விமர்சித்துள்ளார்.
 
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜகண்ணப்பன் கூறியதாவது, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன். 
 
திருபரங்குன்றம் தொகுதியில் 57 கிராமங்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறோம். ஓட்டை நம்பி நிற்காமல் நோட்டை மட்டும் நம்பியிருக்கும் அதிமுக கட்சியை எதிர்த்து திமுக நிச்சயம் வெற்றி பெரும். 
ராஜகண்ணப்பன்
23 ஆம் தேதிக்குப் பிறகு அதாவது வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் அதிமுக ஆட்சி இருக்காது. மக்களின் மனநிலை அப்படித்தான் உள்ளது. செயல்படாத அரசாக அதிமுக அரசு உள்ளது. 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்றால் திமுகவிற்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும். 
 
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று நேர்மையான நிர்வாகம் நடத்த விரும்புகிறார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் யாருடைய அச்சுறுத்தலும் இல்லாமல் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நல்ல ஆட்சி அமையும் என திமுகவின் வெற்றிக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ஆம் வகுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மகன் எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா?