Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கொடுக்கக்கூடாது என அவர்கள் நினைக்கவில்லை.. நாங்கள் வாங்கக் கூடாது எனவும் நினைக்கவில்லை – ராஜேந்திர பாலாஜி தகவல் !

கொடுக்கக்கூடாது என அவர்கள் நினைக்கவில்லை.. நாங்கள் வாங்கக் கூடாது எனவும் நினைக்கவில்லை – ராஜேந்திர பாலாஜி தகவல் !
, திங்கள், 3 ஜூன் 2019 (08:54 IST)
மத்திய அமைச்சரவையில் இடம்பெறாதது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துள்ளார்.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையைக் கைப்பற்றி இரண்டாம் முறையாக் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 30ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டது. அப்போது பாஜகவைச் சேர்ந்தவர்களுடன் கூட்டணிக் கட்சியினரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் தலைவர்கள் யாரும் அமைச்சரவையில் இடம்பெறாதது அதிர்ச்சியளித்தது. இதனால் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அமைச்சரவையில் இடம்பெறாததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சிவகாசியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில் ‘ நிர்வாகிகளின் நியமனத்தில் அதிமுக தலைவர்கள் இணைந்துதான் செயல்படுகிறார்கள். சில காரணங்களா ஒரே ஒரு அமைச்சர் பதவிதான் தரமுடியும் என அவர்கள் சொன்னார்கள். நாங்கள் 2 அல்லது 3 அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதனால்தான் தாமதம். எங்களுக்கு கொடுக்கக் கூடாது என்று பாஜக அரசு நினைக்கவில்லை. வாங்கக் கூடாது என்று நாங்களும் நினைக்கவில்லை. ’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி முடிந்துவிட்டது: செ.கு. தமிழரசன் அறிவிப்பு