Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ரஜினி ’சொன்னதால் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் - பாக்யராஜ் அதிரடி

Advertiesment
Rajini
, ஞாயிறு, 9 ஜூன் 2019 (17:52 IST)
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார்.அதாவது தேர்தல் நடைபெறவுள்ள அன்றே வாக்குகள் எண்ணப்ப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
 
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தலில் பாண்டவர் அணி சார்பில், நாசர்  தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். விஷால் பொதுசெயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கார்த்தி பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார். துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகன்,கருணாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். அவர் அணியில் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிடுகிறார்.இவர்கள் அணிக்கு ’சுமாமி சங்கரதாஸ் அணி’ என்று பெயரிட்டுள்ளனர். 
Rajini
இந்நிலையில் பாக்யராஜ் இதுகுறித்து செய்தியாளரகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் ஆனால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னதாக அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்குப் புதிய தலைவர் – தீயாய் வேலை செய்யும் தலைமை !