Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நேர்மைக்கு கிடைத்த பரிசு - சிறுவன் யாசினை தத்தெடுத்த நடிகர் ரஜினிகாந்த்

நேர்மைக்கு கிடைத்த பரிசு - சிறுவன் யாசினை தத்தெடுத்த நடிகர் ரஜினிகாந்த்
, ஞாயிறு, 15 ஜூலை 2018 (11:08 IST)
கீழே கேட்பாரற்று கிடந்த 50,000 ரூபாயை போலீஸாரிடம் கொடுத்த பள்ளிச் சிறுவனை தத்தெடுத்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.

 
இன்றைய உலகத்தில் பணம் தான் எல்லாமே. பணம் இருப்பவனுக்கு மதிப்புண்டு, பணம் இல்லாதவனுக்கு மதிப்பில்லை. பணம் இருப்பவன் இல்லதோருக்கு உதவி செய்ய தயங்குவான். ஆனால் பணம் இல்லாதவன் அடுத்தவருக்கு உதவி செய்ய மனமிருந்தும் அதற்கு பணம் இல்லாமல் தவிப்பான். இப்படி இருக்கும் வேளையில் ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த 2 ஆம் வகுப்பு மாணவன் செய்த சம்பவம் நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரோட்டில் சைக்கிளில் துணி வியாபாராம் செய்யும் தந்தைக்கும் வீட்டு வேலை செய்யும் தாய்க்கும் மகனாக பிறந்த மகன் முகமது யாசின் அரசுப்பள்ளியில் 2 வகுப்பு படித்து வருகிறான். சிறு வயதிலிருந்தே பெற்றோரின் கஷ்ட நஷ்டங்களைப் பார்த்து வளர்ந்த யாசினை, பெற்றோர் யாருடைய பொருளுக்கும் ஆசை படக்கூடாது என சொல்லி சொல்லி வளர்த்தனர்.
 
அதன் விளைவாய் பள்ளிக்கு சென்ற சிறுவன் கீழே கேட்பாரற்று கிடந்த 50,000 ரூபாயை எடுத்துக்கொண்டு பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைத்தார். பின் யாசினுடன் எஸ்.பி ஆபிஸுக்கு சென்ற ஆசிரியர்கள் நடந்தவற்றைக் கூறி பணத்தை மாணவன் கையால் எஸ்.பியிடம் ஒப்படைக்க வைத்தனர். போலீஸார் மாணவனை வெகுவாக பாராட்டினர்.
webdunia
மாணவனின் இந்த செயல் வைரலாக பரவி அவனுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாணவன் நடிகர் ரஜினியை பார்க்க வேண்டும் என விரும்பியதால், இன்று மாணவனை சந்தித்த ரஜினி யாசினை பாராட்டினார். மேலும் மாணவனை தான் தத்தெடுப்பதாகவும், மாணவன் படிக்க விரும்பும் படிப்பிற்கான செலவுகளை தான் ஏற்பதாகவும் தெரிவித்தார்.
webdunia
யார் பணத்தை, சொத்தை திருடுவோம் என பல திருடர்கள் நிறைந்த சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சிறு வயதில் சிறுவன் கீழே கிடந்த பணத்திற்கு ஆசைப்படாமல் போலீஸாரிடம் ஒப்படைத்தது பல திருடர்களுக்கு சாட்டையடி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் பாஜக இமாலய வெற்றி அடையும் - பொன்னார் உறுதி