Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி வீடியோ டுவிட்டரில் இருந்து நீக்கம்: நெட்டிசன்கள் கிண்டல்

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (07:56 IST)
ரஜினி வீடியோ டுவிட்டரில் இருந்து நீக்கம்
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவுக்கு அனைத்து மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவை டுவிட்டர் இந்தியா அதிரடியாக நீக்கியுள்ளது 
 
அந்த வீடியோவில் கொரோனா வைரஸ் 12 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்தாலே மூன்றாவது நிலைக்கு போகாமல் இருப்பதை தடுக்கலாம் என்று ரஜினிகாந்த் கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள டுவிட்டர் இந்தியா, இந்த கருத்து சந்தேகத்துக்கு உரியது என்பதால் வீடியோவை நீக்கி இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது 
 
ரஜினிகாந்தின் வீடியோ நீக்கப்பட்டதை அடுத்து ரஜினிக்கு எதிரான நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் டுவிட்டர் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்காக ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை அதே டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ரஜினியின் ட்வீட்டை நீக்கியது குறித்து ஒருசில அரசியல்வாதிகளும் கேலியும் கிண்டலுடன் கூறிய கருத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அதே நேரத்தில் கொரோனா வைரஸ் 14 மணிநேரத்தில் இறந்துவிடும் என்பது எந்த ஆய்விலும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த வைரஸ் அதிகபட்சமாக ஒன்பது நாட்கள் வரை உயிர் வாழும் உயிர் வாழும் வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments