Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது: நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (11:43 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் இன்று காலை 10 மணி முதல் ஆலோசனை செய்து வருகிறார். சற்றுமுன் இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்ததாகவும் ஒருசில மாவட்ட நிர்வாகிகளை மட்டும் தனித்தனியாக அவர் சந்தித்து மீண்டும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களை அமைதியுடன் கேட்டுக் கொண்ட ரஜினி அதன் பின்னர் என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது என்றும், மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் தன்னுடன் இருந்தால் போது என்று கூறியதாகவும் பலமுறை எச்சரித்தும் சிலர் என் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை என்றும் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறான் அதுவரை பொறுத்திருங்கள் என்றும் ரஜினிகாந்த் கூறியதாக நிர்வாகிகளிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது
 
மேலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் ரஜினியின் தரப்பில் இருந்து ஒரு நீண்ட அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments