சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் என தகவல்.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தரைதளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்காணித்தனர்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது பேசியதாவது, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். தீ விபத்து ஏற்பட்ட போது உயிர் சேதம் இல்லாமல் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். 105 வருடம் பழமையான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரிவித்தார்.