Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிகாரன்னா கேவலமா போச்சா? டாஸ்மாக்-கில் எலிக்கறி சப்ளை-வைரல் வீடியோ

Advertiesment
புதுக்கோட்டை பார்
, புதன், 19 ஜூன் 2019 (13:20 IST)
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையில் எலிக்கறியை முயல்கறி ஃபிரை என்று விற்பனை செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள டாஸ்மாக்-கில் எலிக்கறி விற்பனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் எலிகளை பிடித்து வேட்டையாடி கொண்டிருக்க, அப்பகுதி மக்கள் அவனை பிடித்து விசாரித்த போது எலிகளை டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்வதாக தெரிவிக்கிறார். 
புதுக்கோட்டை பார்
அதோடு, இந்த எலிக்கறியை தினமும் அங்கு சப்ளை செய்வதாகவும், அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு முயல்கறி ஃபிரை என்று விற்பதாகவும் அந்த நபர் குறிப்பிட்டார். இந்த வீடியோ தீயாக சமூக வலைத்தளங்களில் பரவியது. 
 
எனவே, உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் உண்மையில் முயல் கறிக்கு மாற்றாக எலிக்கறி டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியாருக்குச் செல்கிறதா இந்திய ரயில்வே?: வீ.கே. யாதவின் அதிரடி முடிவு