அம்பேத்கர் மற்றும் வள்ளுவரை இழிவுபடுத்தி பேசியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ்.மணியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய ஆர்.பி.வி.எஸ்.மணியன், அம்பேத்கர் மற்றும் திருவள்ளூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இதனை அடுத்து அவரை சென்னை தியாகராய நகர் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த ஜாமின் மனுவுடன் அவர்தான் பேசிய கருத்துக்கு நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன