Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதாரவியின் அதிமுக ஆசை ? – திமுக நடவடிக்கையின் பின்னணி !

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (14:32 IST)
நயன்தாரா குறித்து அவமரியாதையாக பேசிய விவகாரத்தில் ராதாரவியின் மேல் திமுக எடுத்துள்ள நடவடிக்கைக்கு பின்னணியில் வேறு சிலக் காரணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ராதாரவி தான் பேசும் மேடைகளில் எல்லாம் கவன ஈர்ப்புக்காக சில சர்ச்சையானக் கருத்துகளை பேசுவது வழக்கம். அது அரசியல் மேடையாக இருந்தாலும் சரி, சினிமா மேடையாக இருந்தாலும் சரி. சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் பேசிய ராதாரவி நயன்தாராவைப் பற்றி சில சர்ச்சையானக் கருத்துகளைக் கூறினார்.

இதனால் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் உள்பட பல திரையுலகத்தினர் ராதாரவிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். இந்த விஷயம் திமுக தலைமைக்கும் சென்றது. அதனால் உடனடியாக திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராதாரவி நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ராதாரவியும் தன் பேச்சுக்கு மனவருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ராதாரவியின் மீது பலமுறை இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோதும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக இப்போது தேர்தல் நேரம் என்பதால் இதனால் பின்னடைவுகள் ஏற்படலாம் என்பதால் உடனடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மற்றொரு தரப்பில் ‘ சமீபகாலமாக திமுக வில் ராதாரவிக்கு போதிய வரவேற்பு இல்லாத்தால் அவர் தனது மைத்துனர் சரத்குமாரோடு இணைந்து அதிமுகவில் ஐக்கியம் ஆகலாம் என்ற திட்டத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே அவரேப் போவதற்கு முன்னர் தாங்களாகவே முன்வந்து திமுக இந்த நடவடிக்கையை எடுத்துக் கட்சிக்கு நற்பெயர் ஏற்படுத்திக்கொண்டது’ எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments