நல்லிணக்க நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் எடுக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நேற்று முன் தினம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.
நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.