வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஒரு பக்கம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு அக்டோபர் 16, 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை நான்கு மணி வரை சென்னை மற்றும் கடலோரத்தில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்யும் என்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் சென்னையின் சில பகுதிகளில் 200 மில்லிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு, இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.