நாட்டில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுக்காக்க மூன்றாம் கட்டமாக வரும் மே 17 அவரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சில தொழில்துறையினருக்கு தமிழக அரசு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தமிழக முதல்வர் பழனிசாமி, அனுமதி அளித்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அதில், சினிமாத்துரையினருக்கு தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளாக ( (போஸ்ட் புரோடெக்ஷன் ) மட்டும் வரும் வரும் 11 ஆம் தேதிமுதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதியளித்துள்ளதால், பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும், சமூக இடைவெளி, முக கவசம் அவசியம் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை உரிய சினாமாத் தயாரிப்பு நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.