ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக, முன் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடுவது நடைமுறையாக உள்ளது. அந்த வகையில், வரும் ஜனவரி 1-ஆம் தேதி, 18 வயது நிறைவு அடையும் நாளை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். இந்த திருத்த செயல்களை எளிதாக்க இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தின் முழுமைக்கும் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
சென்னையில், 16 சட்டமன்ற தொகுதிகளில் 19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண்கள் என மொத்தம் 39,52,498 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.