சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீப காலத்தில் ஏற்கனவே பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை செய்தபோது புரளி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் ஏற்கனவே பள்ளிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு உள்பட பல இடங்களில் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் பலமுறாஇ வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.