திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய கோரி தமிழக அரசுக்கு தமிழ் வழக்கறிஞர் பேரவை கோரிக்கை.
தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசுகையில் பல வருடங்களாக தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு முகாம்களின் ஈழத்தமிழர்கள் சிறைக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் தமிழக அரசுக்கு தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் தோ ம ஜான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மேலும் ஈழத் தமிழர்களே அகதிகளாகவே கருத வேண்டும் என்று அவர்களை ஒருபொழுதும் குற்றவாளிகளாக கருத வேண்டாம் எனவும் தமிழ் வழக்கறிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.