Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

Advertiesment
நயினார் நாகேந்திரன்

Mahendran

, சனி, 19 ஏப்ரல் 2025 (16:21 IST)
தீர்மானங்களை மட்டுமே போட்டால் போதுமா? மத்திய அரசோடு கலந்து பேசி நல்ல உறவு வைத்திருந்தால் மட்டுமே ஆட்சி நன்றாக இருக்கும்," என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
 
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசினார். "பொதுமக்களின் எதிர்ப்பை திசை திருப்பவே தீர்மானங்கள் போடப்படுகின்றன. நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது, ஆனால் அதற்கு தீர்மானம் போடுகிறார்கள். கச்சத்தீவு மீண்டும் வராது, பிரதமர் நினைத்தால்தான் நமக்குக் கிடைக்கும். ஆனாலும் தீர்மானங்கள் போடுகிறார்கள். இது போதுமா?" என்று கேள்வியெழுப்பினார்.
 
"2026-ல் பாஜக, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து வெற்றி பெறும் எழுச்சி தெரிகிறது. தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் அகில இந்திய தலைமை சொல்வதை பின்பற்றி செயல்பட வேண்டும். தவறான மீம்ஸ் போட்டால், திமுக கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை கைது செய்யும். சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்," என்றார்.
 
"நம் கூட்டணி இறுதியான உறுதியான கூட்டணி என்பதை மறக்கக் கூடாது. இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். சந்தர்ப்பவாத கூட்டணி என்பது திமுக தலைமையில் உள்ளது. நியாயமான, ஊழலற்ற கூட்டணி என்பது எங்களது நம்பிக்கை. தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்காக தயாராக இருக்க வேண்டும்," என்றார்.
 
"எத்தனை தொகுதிகள், எந்த இடம் என்பதை அமித்ஷா மற்றும் இபிஎஸ் முடிவு செய்வார்கள். எனது அதிகாரம் தொண்டர்களை பாதுகாப்பதுதான். தலைமை எடுத்த முடிவை ஏற்கவேண்டும் என்பதே கட்சி ஒழுங்கு. பூத் அளவிலான பணியை தொடங்கினால், வெற்றி நிச்சயம்," என்று உறுதியுடன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!