Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (00:04 IST)
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த தேர்தல் அதிகாரிகள் ! சோதனை என்கின்ற பெயரில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு.
 
தமிழகத்தில் நாளை நகரமைப்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், கரூரில் திமுகவினர் கரூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வாக்காளர்களுக்கு ரூபாய் 2000 பட்டுவாடா செய்து வந்த நிலையில், இதை தமிழக தேர்தல்  ஆணையத்திற்கு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் என்று பலர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத் துறை அமைச்சருமான வி செந்தில் பாலாஜி கோவையில் முகாமிட்டு உள்ள நிலையில், தனது சொந்த மாவட்டத்தை எக்காரணம் முன்னிட்டும், கோட்டை விடக்கூடாது என்று கூறி, அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஒத்துழைப்போடு அவர்களையும் திமுகவிற்கு வாக்கு சேகரிக்குமாறு, ரகசிய கட்டளையிட்டதாக அதிமுக நிர்வாகிகல் கூறிவந்த நிலையில், இன்று திடீரென்று தேர்தல் பறக்கும் படை மற்றும் காவல்துறையினர் கொண்டு அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் கேபிள் வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான சதாசிவம் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிமுக அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் எதுவும் இல்லாத நிலையில், யார் இந்த புகார் கொடுத்தது என்று அப்போது கட்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, கரூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் மற்றும் இருபதுக்கு மேற்பட்ட போலீசாரை அதிமுக கட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முற்பட்ட போது ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல்துறையினர் வெளியேறு என்று கூறி சோதனை முடிந்து விட்டது. நாங்கள் முறைப்படி அனைத்தும் திறந்து காட்டி விட்டோம் என்று கூறி, அப்போது முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுக வினர் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர்.  இந்த சம்பவத்தால், கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அதிமுகவினர் இடம் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments